yarlathirady.com

வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!

[2026-04-27 23:00:05] Views:[170]

வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.

ஐபோன் பயனர்களுக்காக இந்த எக்ஸ் சட் செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி சேவைகளுக்காக மட்டும் இந்த எக்ஸ் சட் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெசேஜ் செயலி பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் எனவும், பயனர்களின் தனிப்பட்ட உரையாடலை நிறுவனம் உள்பட மூன்றாம் தரப்பால் பயன்படுத்த முடியாது.

விளம்பரங்கள் மற்றும் பயனர்களை கண்காணிக்கும் எந்த டிராக்கிங் அம்சமும் இதில் இருக்காது. தொலைபேசி எண்கள் இல்லாமல் ஏற்கனவே உள்ள எக்ஸ் கணக்கை வைத்தே log in செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

ஓடியோ மற்றும் காணொளி வசதி உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த செயலி விரைவில் ஆண்ட்ராய்டுகளுக்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறுஞ்செய்தி அனுப்பும் சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் வட்ஸ்அப்புக்கு கடும் சவாலாக இந்த செயலி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.