yarlathirady.com

விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு..!

[2026-05-06 22:27:59] Views:[192]

பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் த.வெ.கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தள்ளது.

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு முழு ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது. இதுதொடர்பான கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. த.வெ.க.வை ஆதரிப்பதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.

மதவாத சக்திகளை கூட்டணியில் அனுமதிக்ககூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

இந்த கூட்டணியானது இனி வரும் காலங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையை நிரூபித்து எப்போது ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலோங்கியுள்ளது.


சினிமாசெய்திகள்
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
'த்ரிஷ்யம் 3' கலெக்சன் இதோ.!
2026-05-22 18:00:16
மலையாள சினிமாவின் மிக முக்கியமான திரில்லர் சீரிஸ்களில் ஒன்றாக பார்க்கப்படும் த்ரிஷ்யம் 3 தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜித்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் மீண்டும் ஜார்ஜ்குட்டியாக திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு
2026-05-15 17:05:23
பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் கருப்பு
காஞ்சனா 4
2026-05-11 17:06:54
காஞ்சனா 4 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
பிரபல தயாரிப்பாளர் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழப்பு..!!
2026-05-05 21:53:50
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று நடந்த வாகன விபத்தில் காலமானார்.