முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
[2026-05-25 21:42:18] Views:[112]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதாவது, முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வருவதாலும், அதனை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.










