இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது.!!
[2026-07-08 16:40:27] Views:[56] வெளிநாட்டவர் ஒருவருக்கு ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா – மாஞ்சோலை பகுதியில் இருந்து நிலாவெளி பகுதிக்கு குறித்த வலம்புரிச் சங்குகளை எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோதே, நேற்று நண்பகல் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










