போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை..!
[2026-07-12 21:59:57] Views:[46]
வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கூறப்படுகிறது.
வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது குற்றவாளிக்கு எதிரான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.
அதற்கு இணங்க குறித்த குற்றசாட்டிற்கு இரண்டு வருட கால சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபா அபராதம், அபராத தொகையினை செலுத்த தவறின் ஒரு ஆண்டு கால சிறைத்தண்டனை மேலும் அனுபவிக்க நேரிடும் என தீர்ப்பளித்ததாக கூறப்படுகிறது.










