தமன்னாவின் பேண்டஸி படமான ‘தி விவான்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு
[2026-07-12 22:04:56] Views:[65]
தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக தனது இடத்தைத் தக்கவைத்திருக்கும் தமன்னா பாட்டியா, தற்போது பாலிவுட்டில் தனது அடுத்த முக்கியமான படைப்பாக உருவாகியுள்ள ‘தி விவான்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் சந்திக்கத் தயாராகியுள்ளார்.
ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் தீபக் குமார் மிஷ்ரா இயக்கியுள்ளார். படத்தில் தமன்னாவுடன் இணைந்து சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சுனில் குரோவர், மனீஷ் பால், ஸ்வேதா திவாரி மற்றும் அனுப் சோனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'தி விவான்' திரைப்படம் வழக்கமான காதல் அல்லது அதிரடி கதையாக அல்லாமல், நாட்டுப்புறக் கதைகளின் பின்னணியில் உருவாகியுள்ள பேண்டஸி திரைப்படமாக அமைந்துள்ளது. கற்பனை உலகம், புராண அம்சங்கள் மற்றும் நவீன திரைப்படத் தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டிருப்பதால், இந்தப் படம் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டிவிஎப் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘தி விவான்’ திரைப்படம், வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.










