யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை பல்முக போக்குவரத்து மையமாக அபிவிருத்தி செய்ய திட்டம்.
[2026-07-13 22:15:57] Views:[50]
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை ஒரு 'பல்முக போக்குவரத்து மையமாக' அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் புனரமைக்கப்பட்ட வீதியினை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வினை தொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்










