yarlathirady.com

காற்பந்து உலக கோப்பையை 16 வருடங்களுக்கு பிறகு தட்டி தூக்கிய ஸ்பெயின்

[2026-07-20 21:30:59] Views:[36]

2026 Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் 16 வருடங்களுக்கு பிறகு வெற்றியீட்டியுள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜெண்டினாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.

4ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆர்ஜென்டினாவும், 2ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின.

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் போது ஆர்ஜென்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்..

இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது. கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார்.

அதன் பிறகு ஆர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.

இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23ஆவது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.