yarlathirady.com

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை.

[2026-07-22 19:21:09] Views:[32]

வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்கவின் பங்குபற்றுதலுடன் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர் முன்னேற்றங்களை ஆராயும் விசேட கூட்டமொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் வெகுவிரைவில் ஏனைய மாவட்டங்களுக்கான மணல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.