yarlathirady.com

யாழில் எரித்தழிக்கப்பட்ட ஆபத்தான பொருள்..!

[2026-07-25 21:10:56] Views:[44]

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் நேற்றைய தினம் சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

அவை தொடர்பான வழக்குகள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வழக்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து குறித்த கஞ்சா பொதிகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த எரித்தழிப்பு நடவடிக்கை நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார், ஊர்காவற்துறை பொலிஸார், கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.  


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.