yarlathirady.com

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

[2026-07-25 21:47:17] Views:[21]

இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற விழிப்புணர்வுச் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய பசுபிக் பிராந்தியக் கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மற்றும் வேகமாகப் பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது. இதனால் இந்து சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது.

அத்துடன் இலங்கை மற்றும் வட மாகாணத்திற்கான பாதிப்புகள் இந்தக் கடல் வெப்ப ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது.இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது உருவாக்கும்.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் எல்நினோ, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் தோற்றுவிக்கும். ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.

எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தைப் பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும்” என தெரிவித்தார்.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.