யாழில் உள்ள எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகில் திடீர் தீ...!!
[2026-07-27 19:17:53] Views:[39]
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென தீ பரவிய நிலையில், கடற்படையினர் மற்றும் பெற்றோலிய அதிகாரிகளின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாகவும் அயலவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்தைச் சூழவுள்ள வெற்றுக்காணிகள் நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்படுவதுடன், அவற்றில் குப்பைகளும் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










