குடிசைகளில் ஏற்பட்டதீ விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு
[2023-05-12 05:57:47] Views:[465] உத்திரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டம் ராம்கோலா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள மகி மதியா கிராமத்தில் உள்ள குடிசைகளில் தீப்பிடித்து பெரும் விபத்து ஏற்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
இக் குடிசைகளில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர் ஆனால் தீ அதிகளவில் பரவி மாற்றுத்திறனாளி பெண் மற்றும் 4 குழந்தைகள் என 5 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.