மீண்டும் விபத்து - 6 பேர் உயிரிழப்பு
[2023-06-08 12:23:14] Views:[599] கடந்த வாரம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகி
தற்போது வரை 288 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து விபத்தில் சிக்கிய அதே இடத்தில் இன்று மீண்டும் சரக்கு தொடருந்து மோதியதில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர் என்று தவவல்கள் வெளியாகியுள்ளது.