ஒடிசா கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
[2023-06-17 11:24:58] Views:[451] ஒடிசா ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த இரண்டாம் ஆம் திகதி 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் 288 பேர் உயிரிழந்ததுடன்,1 000 ற்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்து பகனகா பஜார் நகரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த ஒருவர் ஜுன் 13 அன்று உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.