வரதட்சணை கேட்டு கொடுமை
[2023-09-13 11:18:14] Views:[480] மூன்று ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் ஒன்று நடை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ம் திகதி கனவர் தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
அதற்காக தன் மனைவியை கயிறு கட்டி இழுத்துச் சென்று தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள் இறக்கியுள்ளதாகவும் மனைவி தன்னை மேலே தூக்கி விடுங்கள் என்று எவ்வளவு கெஞ்சி அழுதும் கனவன் கூட இரக்கம் இல்லாமல் க செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தன் மனைவி கிணற்றுக்குள் இருக்கும் வீடியோவையும் பதிவு செய்து அவரது மைத்துனருக்கு அனுப்பிய அவரிடம் 5 லட்ச ரூபாய் பணம் கேட்டதாகவும் இதனை பார்த்து அதிர்ச்த்தியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் ராகேஷுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்
அந்த கிராமத்தில் இருக்கும் சிலரை தொடர்பு கொண்டு தங்களது மகளை காப்பாற்றுமாறு கூறியுள்ளனர் பின்னர் அந்த பெண் கிணற்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற பெண் நடந்த கொடுமைகள் அனைத்தையும் கூறியுள்ளார்.
பெண் வீட்டார் கணவனுக்கு எதிராக பொலீசில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து கணவனை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.