காரை உடைத்து 13 இலட்சம் ரூபா திருட்டு
[2023-10-24 15:06:54] Views:[503] இந்தியா- கர்நாடகா மாநிலம் - பெங்களூரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்றில் இருந்து இரு கொள்ளையர்கள் அதில் இருந்த 13 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் அருகில் இருந்த சிசிரீவி கருவியில் பதிவாகியுள்ளது.
கார் அருகே முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவரில் ஒருவர் ஆயுதத்தை கொண்டு கார் ஜன்னலை உடைத்து உள்ளே இறங்கி பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளதாகவும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தயார் நிலையில் இருந்த அவரது மற்றொரு நபருடன் கொள்ளையை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.