பரீட்சைக்கு படிக்காமல் கைப்பேசியில் விளையாடிய மகளை தடியால் அடித்து கொன்ற தாய்...!
[2024-05-23 11:18:47] Views:[253] ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சீதா தேவி எனபவரின் 22 வயதான மகள் நிகிதா பரீட்சைக்கு தோற்றவிருந்த நிலையில் அதற்காக அவர் படித்து வந்துள்ளார்.
ஆனால் படிப்பதில் கவனம் செலுத்துவதை குறைத்த நிகிதா, கைப்பேசியில் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். ஆனாலும் நிகிதா கைப்பேசி பயன்பாட்டைக் குறைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று நிகிதாவுக்கும் தாயாருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது அருகில் கிடந்த தடியை எடுத்து நிகிதாவை, அவரது தாய் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிகிதா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சீதா தேவி மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.