இந்தியா – காஷ்மீரில் பேருந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு..!
[2024-05-31 21:16:49] Views:[203] இந்தியாவின் காஷ்மீரில் உள்ள மலைப்பாங்கான நெடுஞ்சாலையில் இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஜம்மு பகுதியில் மலையில் இருந்து 150 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த குறித்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பயணிகள் காயமடைந்ததாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுகாதார அதிகாரி அக்னூர் சலீம் கான் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிக சாலை இறப்பு விகிதங்களில் சிலவற்றை இந்தியா கொண்டுள்ளதுடன் மேலும் ஆண்டுதோறும் நூறாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள் மற்றும் காயமடைகின்றமை குறிப்பிடத்தக்கது.