ஒரே ஓடு பாதையில் ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி...!!
[2024-06-14 11:13:03] Views:[185] ஒரே ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் சென்றதால் பயணிகளிடையே பெரும் பதற்றம் உருவானது. இந்த சம்பவம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய 27 வது ஓடுபாதையில் நடைபெற்றுள்ளது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானமும் அதேசமயம் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்திலிருந்து வந்த இண்டிகோ விமானமும் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டுள்ளது. மேற்படி இந்த சம்பவத்தில் எவ்வித விபத்தும் ஏற்படவில்லை.
இதேவேளை மும்பை விமான நிலையத்தில் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் இயக்கப்பட்ட விவகாரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்த விமான போக்குவரத்து பணியகம் உத்தரவிட்டுள்ளது.