மீண்டும் திறக்கப்பட்ட கோயிலின் மர்ம பொக்கிச அறை...!!
[2024-07-15 21:11:59] Views:[263] உலகப்புகழ் பெற்ற இந்தியாவின் பூரி ஜெகன்நாதர் கோவிலின் பொக்கிச அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், ரத்னா பந்தர் என்னும் குறித்த பொக்கிச அறை நேற்று 46 ஆண்டுகளுக்கு பிறகு தொல்லியல் துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் முன்னிலையில் நேற்று பொக்கிச அறை திறக்கப்பட்டு அதில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு பணிகள் மிகவும் இரகசியமாக நடைபெற்று வருவதால் பணிகள் முடிய சுமார் 70 நாட்கள் வரை ஆகலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.