பாடசாலை மாணவர்கள் மீது மோதிய பேருந்து - சீனாவில் 11 பேர் பலி
[2024-09-03 19:07:22] Views:[254] சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதன் படி சீனாவில்ஷான்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
உயிரிழந்தவர்களில் 5 பாடசாலை மாணவர்களும், 6 பெற்றோரும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 12 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.