24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !
[2024-12-31 09:31:20] Views:[158] கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டிகை காலத்தின் போது ஏற்படும் வாகன விபத்துகளைக் குறைப்பதற்காக பதில் பொலிஸ்மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய நேற்றைய தினம் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், போக்குவருத்து விதிகளை மீறிய 1086 சாரதிகளுக்கு எதிராகவும், கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 49 சாரதிகவும், அதிக வேகமாக வகானம் செலுத்திய சாரதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீதி அனுமதிப்பத்திரம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக மொத்தமாக 7,676 சாரதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.