yarlathirady.com

அரச ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் 40,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் !

[2024-12-31 09:58:51] Views:[187]

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முன்பணத்தை இவ்வருடம் குறைந்தது 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு, இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிகார அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அரசிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுப்பதாக கூறிய அவர், 10,000 ரூபா தொகையை வைத்து இக்காலத்தில் எதுவும் செய்ய முடியாது எனவே இம்முறை பண்டிகை முன்பணத்தை குறைந்த பட்சம் 40,000 ரூபாவாக அரசு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், அரசு பாடசாலை மாணவர்களுக்கு வழங்க உத்தேசித்துள்ள 6,000 ரூபா உதவித்தொகையை அரசு அலுவலர்களின் பிள்ளைகள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்குவது போன்று அனைத்து மாணவர்களுக்கும் இந்த தொகையை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுக்கிறார்.


சினிமாசெய்திகள்
சூர்யாவின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கருப்பு’ பட டீசர் வெளியானது..!
2025-07-23 21:49:33
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் சூர்யா, தனது 50வது பிறந்த நாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் First Look நேற்றைய தினம் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!!
2025-07-15 09:34:55
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.