12 ராசிகளுக்கும் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்…?
[2024-12-31 21:24:16] Views:[371] மேஷம்
நன்மைகள் தொடர்ச்சியாக வரும் ஆண்டு. அதேசமயம் எதிலும் திட்டமிடல் முக்கியம். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். சீரான போக்கு நிலவும். அதேசமயம்,எதிலும் முழு கவனம் செலுத்துங்கள். வீட்டில் விசேஷங்கள் வரும். தம்பதியரிடையே சீரான போக்கு நிலவும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான தீர்வு கிட்டும். வாரிசுகளால் பெருமை சேரும். சுபகாரியங்களில் வீண் செலவைத் தவிருங்கள். அதேசமயம், வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியமாகும். செய்யும் தொழிலில் முழு முயற்சிகள் இருந்தால், லாபம் தொடர்ச்சியாகும். புதிய முதலீடுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். அரசு, அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு தொடரும். பொது இடங்களில் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்கள் சோம்பலை விரட்டினால் சாதனைகள் படைக்கலாம். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். நரம்பு, தலைவலி, அலர்ஜி உபாதைகள் வரலாம். வாகனத்தில் வேகம் கூடாது. செந்திலாண்டவர் வழிபாடு செழுமை சேர்க்கும்.
ரிஷபம்
எண்ணங்கள் ஈடேறத் தொடங்கும் வருடம். எதிலும் நேரடி கவனமும் தொடர் முயற்சிகளும் முக்கியம். பணியிடத்தில் ஏற்றமும் மாற்றமும் வரும். அதேசமயம் எதிர்பாரா இடமாற்றமும் வரலாம். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். மறைமுக எதிரிகள் பலம் அதிகரிக்கலாம். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். பணத்தைக் கையாள்வதில் அவசரம் கூடாது. இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். உறவுகளால் வசந்தம் வரும். சுபகாரியங்கள் கைகூடி வரும். வரவை சேமிக்கப் பழகுங்கள். பெற்றோர், பெரியோர் உடல்நலனில் அக்கறை அவசியம். மூன்றாம் நபர் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். வரவை சேமிக்கப் பழகுங்கள். கொடுக்கல் வாங்கலை நேரடியாகச் செய்யுங்கள். செய்யும் தொழிலில் சுணக்கம் நீங்கும். முழுமையான உழைப்பு இருந்தால், சீரான வளர்ச்சி ஏற்படும். பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட், சூதாட்ட முதலீடு எதுவும் வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். பொது இடங்களில் வாக்குறுதிகள் தருவதைத் தவிருங்கள். கலை,படைப்புத் துறையினர் திறமைக்கு உரிய ஏற்றத்தைப் பெறுவீர்கள். அயல்நாட்டுப் பயணத்தில் சட்டத்தை மதித்தல் அவசியம். மாணவர்கள், அதிகாலைப்படிப்பை வழக்கமாக்குவது நல்லது. பயணப் பாதையில் சுகாதாரமில்லா உணவே நஞ்சாகலாம் கவனமாக இருங்கள். சுளுக்கு, பல், மூட்டு உபாதைகள் வரலாம். பெருமாள், தாயார் வழிபாடு பெருமை சேர்க்கும்.
மிதுனம்
நிதானத்தால் நிலையான நன்மைகளைப் பெறவேண்டிய ஆண்டு. எந்த சமயத்திலும் அலட்சியம் அவசரம் வேண்டாம். பணியிடத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். அதேசமயம், எதிர்பார்த்த உயர்வுகள் நிதானமாகவே கிட்டும். தனிப்பட்ட பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். கோப்புகளை பத்திரமாகக் கையாளுங்கள். பணியிட ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம், வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். விட்டுக்கொடுத்தல் உங்கள் பங்காக இருந்தால், அமைதியும் ஆனந்தமும் தொடரும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் நடக்கும். எதிர்பார்த்த பொருள் வரவு நிச்சயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்கள். பழைய கடன்களை முழுமையாகப் பைசல் செய்யுங்கள். செய்யும் தொழிலில் உங்கள் செயல்பாடுகளுக்கு ஏற்ப செழிப்பு உருவாகும். கூட்டுத் தொழிலில் புதிய முதலீடுகளில் நிதானம் முக்கியம். அரசுத்துறையில் உள்லவர்களுக்கு நன்மைகள் தொடரும். அதேசமயம் உங்கள் வாக்கில் நிதானம் அவசியம் தேவைப்படும். அரசியலில் உள்ளவர்கள், மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். வாக்குறுதி எதையும் தரும் முன் நிதானமாக யோசியுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் அரசுவழி ஆதரவைப் பெறுவீர்கள். புதிய நபர்களிடம் படைப்பு ரகசியங்கள் எதையும் பகிர வேண்டாம். முயற்சிகளில் முடங்காத மாணவர்களுக்கு மனம்போல நன்மை உண்டாகும். பயணத்தில் வேகம் கூடவே கூடாது. பற்கள், எலும்பு, தலைவலி உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு வாழ்வைத் தழைக்கச் செய்யும்.
கடகம்
முயற்சிகளால் முன்னேற வேண்டிய ஆண்டு. தன்னம்பிக்கையுடன் தளராமல் செயல்பட்டால் தலைநிமிர்ந்து நடக்கலாம். அலுவலகத்தில் சீரானபோக்கு நிலவும். உங்கள் உழைப்பில் சின்சியாரிட்டி இருந்தால், செல்வாக்கும் உயரும். தடைபட்ட உயர்வுகள் படிப்படியாக வரும். சிலருக்குப் புதிய பணி வாய்ப்பும் அமையும். எந்த சமயத்திலும் துணிவைவிட பணிவுதான் நல்லது. புதிய பொறுப்புகள் வந்தால் தவிர்க்காமல் ஏற்பது சிறப்பு. எதிர்பார்த்த அயல்நாட்டு வாய்ப்புகள், தாமதமானாலும் நிச்சயம் கைகூடி வரும். வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். அது நிலைத்திருக்க, வார்த்தைகளில் நிதானம் முக்கியம். வரவு சீராக இருக்கும். சுபகாரியங்களில் அநாவசிய ஆடம்பரம் தவிருங்கள். தரல், பெறலில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். வீடு, வாகனம் புதுப்பித்தாலில் அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி சீராக இருக்கும். அதில் புதிய மாற்றம் எதையும் முழுமையாக யோசித்துச் செய்யுங்கள். அயல்நாட்டு வர்த்தகத்தை நேரடி கவனத்துடன் நேர்மையாகச் செய்யுங்கள். அரசுத்துறையில் உள்ளோர் பொறுமையாக இருப்பதே நல்லது. அரசியல் சார்ந்தவர்கள் அமைதியாக இருப்பதே நல்லது. கையெழுத்திடும் சமயத்திலும், பேச்சிலும் நிதானமாக் இருங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திடீர் யோக வாய்ப்பு உண்டு. மாணவர்கள் இரவில் அவரவர் இல்லத்திலேயே இருப்பது நல்லது. வாகனப் பாதையில கவனச் சிதறல் கூடாது. ரத்தநாளம், நரம்பு சம்பந்தமான உபாதைகள், பெண்களுக்கு ஹார்மோன் உபாதைகள் வரலாம். பைரவரைக் கும்பிடுவது வாழ்வை பசுமையாக்கும்.
சிம்மம்
சிந்தித்து செயல்பட்டால், சீரான நன்மைகள் கிட்டக்கூடிய ஆண்டு. தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்வதும், தளராமல் உழைப்பதும் நல்லது. பணியிடத்தில் உழைப்பதில் சோம்பல் வேண்டாம். உடனிருப்போர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிருங்கள். எல்லாம் தெரியும் நினைவும் ஏனோதானோ செயல்பாடும் கூடாது. அனுபவம் மிக்கவர்களை மதியுங்கள். எதிர்பாராத இடமாற்றம், பொறுப்பு மாறங்கள் வந்தால் வீண் சச்சரவின்றி ஏற்பதே நல்லது. குடும்பத்தில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். விலகி இருந்த உறவும் நட்பும் தேடிவந்து சேரும். உறவு, நட்பு என யாரிடமும் வீண் வன்மம் வேண்டாம். பொறுமையாக இருந்தால் சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல் வாங்கலை முறைப்படுத்துங்கள். வாரிசுகளால் பெருமை உண்டு. வீண் கண்டிப்பு தவிருங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். இளம் வயதினர் , பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். செய்யும் தொழிலில் முழுமையான ஈடுபாடு காட்டுங்கள். புதிய முதலீடுகளை அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை கேட்டுச் செய்யுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பொறுமையாக இருப்பதே நல்லது. கூடாநட்பை உடனே விலக்குங்கள். படைப்புத் துறையினர் முயற்சிகளுக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வாய்ப்புகளில் சின்சியராக இருங்கள். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். தொலைதூரம் வாகனத்தை ஓட்டும் முன் முழுமையான ஓய்வு அவசியம். ஜீரண உறுப்பு, நரம்பு உபாதை, அல்சர் பிரச்னை வரலாம். துர்க்கை வழிபாடு நன்மைகளை துளிர்க்கச் செய்யும்.
கன்னி
உயர்வுகள் வரக்கூடிய உன்னதமான ஆண்டு. அதேசமயம்,எதையும் திட்டமிட்டும் நேரடி கவனத்துடனும் செய்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். புதிய பொறுப்புகள் எண்ணம்போல் வந்து சேரும். எதிர்பார்த்த அயல்நாட்டு வாய்ப்புகள் கைகூடி வரும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் பலன் தரும். தேவையற்ற தர்க்கம் யாருடனும் வேண்டாம். புதிய நபர்களை நம்பி பெரும் முதலீடு செய்ய வேண்டாம். இல்லத்தில் ஒற்றுமை உருவாகும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்ட சுபகாரியங்கள் குலதெய்வ வழிபாட்டினால் கைகூடும். உறவுகள் வருகையும் அதனால் ஆனந்தமும் அதிகரிக்கும். இளம் வயதினர் சுபகாரியத்தில் பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து சேரும். விட்டுக்கொடுத்தால், வீட்டில் விடியல் நிரந்தரமாகும். வாழ்க்கைத் துணையுடன் சிறு பிரச்னையும் தவிருங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். நேரான செயல்களும் நேர்மையும் லாபத்தைத் தொடர்ச்சியாக்கும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு மேலிடத்தின் ஆதரவு சீராக இருக்கும். கனவிலும் விதிமீறல்கள் வேண்டாம். புறம்பேசுவோர், முகஸ்துதியினரைத் தவிருங்கள். படைப்புத் துறையினர் திட்டமிடலில் முழு கவனமாக இருங்கள். வாய்ப்புகள் எதையும் பிறர் பேச்சைக் கேட்டுத் தவறவிட வேண்டாம்.மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குங்கள். வாகனத்தில் சிறு பழுதும் உடன் சீர் செய்யுங்கள். வேகத்தைத் தவிருங்கள். முதுகு, கழுத்து, தோள்பட்டை பிரச்னைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.
துலாம்
எண்ணங்கள் ஈடேறக்கூடிய வருடம். நல்லவை தொடர நாவடக்கம் முக்கியம். பணியிடத்தில் எதிர்பார்த்த ஏற்றமும் மாற்றமும் கைகூடி வரும். உயரதிகாரிகள் ஆதரவு உண்டு. உடனிருப்போர் விஷயங்களில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். . சிலருக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் வரலாம். அது ஆதாயமாகவே இருக்கும். சோம்பலை உடனடியாக விரட்டுங்கள். புதிய முயற்சியாக எடுக்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்போது நேர்மையான வழிமுறைகளைக் கையாளுங்கள். குடும்பத்தில் குழப்ப சூழல் நீங்கி, நிம்மதி நிலவும். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். வாரிசுகளால் பெருமை உண்டு. வாழ்க்கைத் துணையுடன் வீண் த்ர்க்கம் வேண்டாம். வரவு சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ, பெறவோ வேண்டாம். கடன்கள் எதையும் நேரடியாகப் பைசல் செய்யுங்கள்.செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. அயல்நாட்டு வர்த்தகத்தினால் ஆதாயம் உண்டு. ரியல் எஸ்டேட்டில் அனுபவம் இன்றி இறங்க வேண்டாம். அரசுத்துறையினர்க்கு அனுகூல சூழல் நிலவும். அலுவலகத்தில் வீண் களியாட்டம் தவிருங்கள். பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம். அரசியல் சார்ந்தவர்கள் ஆதரவு நிலைக்கும். பொது இடங்களில் பேசும்போது நிதானம் தேவை. அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். கலைஞர்கள், படைப்புத்துறையினர், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள். மாணவர்கள் அதிகாலைப் படிப்பைப் பழக்கமாக்குங்கள். வாகனத்தில் கவனச் சிதறல் கூடாது. அடிவயிறு, கழிவு உறுப்பு, சுளுக்கு உபாதைகள் வரலாம். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.
விருச்சிகம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வருடம். அதை தலைகனமாக ஆக்கிக்கொள்ளாதவரை நன்மைகள் நீடிக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். சக ஊழியர்களிடையே செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வுகள் பொறுமையாக இருந்தால், நிச்சயம் கைகூடிவரும். பணியிடத்து ரகசியங்களை வெளியிடத்தில் யாரிடமும் பகிர வேண்டாம். புதிய பணி தேடுவோர்,வருவதை ஏற்றுத் திறம்படச் செயல்பட்டால், எதிர்காலம் ஏற்றமாகும். வீட்டில் சுமுகமான சூழல் நிலவும். உறவுகள் வருகையால் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தோரிடம் வீண் தர்க்கம் தவிருங்கள். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். திருமணம், மகப்பேறுக்காக காத்திருப்போர் குலதெய்வத்தை மனதாரக் கும்பிடுங்கள். வீடு, வாகனம் புத்துப்பிக்க, வாங்க வாய்ப்புகள் வரும். தெரியாத நபரை நம்பி எந்த சமயத்திலும் எந்தத் தொகையும் கொடுக்க வேண்டாம். அக்கம் பக்கத்தில் வீண் உரசல் தவிருங்கள். செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ற உயர்வு வரும். வர்த்தகக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துங்கள். அரசுத்துறையினருக்கு சாதகமான சூழல் நிலவும். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு வரலாம், தவிர்க்காமல் ஏற்பது நல்லது. அரசியலில் உள்ளோர் செல்வாக்கு நிலைக்கும். முகஸ்துதி நபர்களை உடனே விலக்குங்கள். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். கலைஞர்கள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் தேடிவரும். உடனிருப்போருடன் உரசல் தவிருங்கள். மாணவர்கள் மறதியை விரட்டினால், மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். ஒற்றைத் தலைவலி, அஜீரணம், தூக்கமின்மை உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு முன்னேறச் செய்யும்.
தனுசு
அமைதியாகச் செயல்பட்டால் ஆனந்தம் அதிகரிக்கும் ஆண்டு. எந்த சமயத்திலும் பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். உடனிருப்போர் குறையை பெரிதுபடுத்த வேண்டாம். பணத்தைக் கையாள்வதில் நிதானம் முக்கியம். மேலதிகாரிகளிடம் பேசும்போது துணிவை விட பணிவே நல்லது. ஜம்பத்துக்காக வாக்குறுதிகள் எதையும் யாருக்கும் தரவேண்டாம். குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். அதை சீரியஸ் ஆக மாற்றாமல் இருக்க, உறவுகளிடம் குதர்க்கப் பேச்சைத் தவிருங்கள். தம்பதியர் இடையே மனம்விட்டுப் பேசுங்கள். எந்தப் பிரச்னையிலும் மூன்றாம் நபர் மத்தியஸ்தத்திற்கு இடம்தர வேண்டாம். பெற்றோர், பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். கொடுக்கல் வாங்கலை நேரடி கவனத்தோடு செய்யுங்கள். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பொருள் சேரும். செய்யும் தொழிலில் நேரடி கவனமும் நேர்மையும் தேவை. புதிய முதலீடுகளில் அவசரம் தவிருங்கள். அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். யாரோ செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பழி ஏற்க நேரிடலாம். எந்த சமயத்திலும் கவனம் முக்கியம். கலை, படைப்புத் துறையினர், கவனத்தை சிதறவிடாமல் இருப்பதும், நேரடி கவனம் செலுத்துவதும் முக்கியம்.. மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டலைக் கேளுங்கள். தினமும் சிறிது நேரமாவது குலதெய்வத்தை கும்பிடுங்கள். இரவு நேரப் பயணத்தில் உடன் வருவோர் தரும் உணவு, பானங்களைத் தவிருங்கள். மனஅழுத்தம், ரத்த அழுத்த மாற்றம், நரம்பு உபாதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு, இனிமை சேர்க்கும்.
மகரம்
ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய ஆண்டு. நல்லவை வரும் சமயத்தில் அல்லவை பேசுவதை அறவே தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்களின் பலகாலக் கனவுகள் நனவாகத் தொடங்கும். இடமாற்றம், உயர்வுகள் இஷ்டம்போலவே கைகூடும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். இந்த சமயத்தில் பழைய கசப்பில் யாருடைய தவறையும் பெரிதுபடுத்த வேண்டாம். செல்லும் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடங்கள். கொண்டு செல்லும் பணி சார்ந்த கோப்புகள் பத்திரம். குடும்பத்தில் விடியல் வெளிச்சம் பரவும். குழந்தைகளால் பெருமை சேரும். குதூகலம் நிலைக்க, குதர்க்கமும் குத்திக்காட்டலும் அறவே தவிருங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வீடு, வாகனம் வாங்க புதுப்பிக்க யோகம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். வர்த்தகக் கடன்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். மேலிடத்தைப்பற்றி விளையாட்டாகவும் குறை சொல்ல வேண்டாம்.. அரசுத்துறையினர்க்கு எண்ணங்கள் பூர்த்தியாகும்.பொது வெளியில் நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் நற்செய்திகள் நிச்சயம் வரும். மாணவர்களுக்கு சீரான நன்மைகள் கிட்டும். அதேசமயம், சகவாசத்தால் பிரச்னை வரலாம், கவனமாக இருங்கள். வாகனத்தில் வேகக்கட்டுப்பாடு முக்கியம். நரம்பு, ஒற்றைத் தலைவலி, கழுத்து உபாதைகளை உடனே கவனியுங்கள். பெருமாள், தாயார் வழிபாடு பெருமை சேர்க்கும்.
கும்பம்
பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டால், பெருமைகள் சேரும் ஆண்டு. அதேசமயம் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அலுவலகத்தில் உரியவர்களால் உங்கள் திறமை உணரப்படும். உரிய சமயத்தில் பதவி, பொறுப்பு உயரும். எண்ணம்போல் இடமாற்றம் வந்து சேரும். திட்டமிட்டு செயல்பட்டால், இடமாற்றம், உயர்வுகள் கைகூடிவரும். உடனிருக்கும் யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவ ஆரம்பிக்கும்.. வேண்டாத சந்தேகமும் வீண் குழப்பம் தவிருங்கள். மூன்றாம் நபர் தலையீட்டைக் குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். தம்பதியர் பரஸ்பரம் மனம்விட்டுப் பேசுங்கள். உங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். வாரிசுகளிடம் அதீதக் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியங்களில் பெரியோர் ஆலோச்னை கேளுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். அசையும் அசையா சொத்தில் பத்திரங்கள் பத்திரம்.செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். கூட்டுத் தொழிலில் நிதானம் முக்கியம். அரசுத் துறையினர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள். பணிசார்ந்த விவரங்களை பிறரிடம் பகிர வேண்டாம். அரசியல் சார்ந்தவர்கள் அடக்கமாக இருந்தால் அநேக நன்மை கிட்டும். மேலிடத்திடம் வீண் ரோஷம் வேண்டாம். கலை, படைப்பாளிகள் திறமைக்கு உரிய உயர்வுகளை நிச்சயம் பெறுவீர்கள். மாணவர்கள் எதிர்காலத்துக்கான திட்டமிடலை கவனமாகச் செய்வது நல்லது. வாகனப் பயணத்தில் லாகிரி வஸ்துவுக்கு இடம்தர வேண்டாம். அடிவயிறு, தொண்டை, கழுத்து, முதுகு உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு ஏற்றம் தரும்.
மீனம்
அமைதியாகச் செயல்படவேண்டிய ஆண்டு. அவசரமும் அலட்சியமும் எந்த சமயத்திலும் கூடவே கூடாது. அலுவலகத்தில் சுமுகப் போக்கு நிலவும். அதை உங்கள் செயலால் சீரழிக்க வேண்டாம். எதிர்பாரா இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்பதே நல்லது. சிலருக்கு அயல்நாட்டுப் பயண வாய்ப்பு தடைபடலாம், அது நன்மைக்கே. மேலதிகாரிகள் ஒப்படைக்கும் பணிகளை நேரடியாகவும் நேரம் தவறாமலும் செய்யுங்கள். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனையைக் கேளுங்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். அதேசமயம் உங்கள் செயலிலும் வாக்கிலும் நிதானம் முக்கியம். சகோதர வழி உறவுகளிடம் வீண் சர்ச்சை வேண்டாம். வீடு, மனை பத்திரங்களை பத்திரமாக வையுங்கள். யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையாட்ட வேண்டாம். அசையும் அசையா பொருட்களை வாங்குவது, விற்பதில் நிதானம் தேவை. புதிய நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். அக்கம் பக்கத்தினரிடம் சர்ச்சை தவிருங்கள்.செய்யும் தொழிலில் முயற்சிக்கு ஏற்ப வளர்ச்சி உருவாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாடு முக்கியம். அரசுத்துறையினர் கவனச் சிதறலைத் தவிருங்கள். எதிர்பாரா இடமாற்றம் வரலாம். தவிர்க்காமல் ஏற்பது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். அரசியல் சார்ந்தவர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். கலை, படைப்புத் துறைனருக்கு, பாராட்டுகள் கிடைக்கும். அதேசமயம்,புறம்பேசுவோர் நட்பு கனவிலும் வேண்டாம். மாணவர்கள் திறமைக்கு உரிய பெருமைகளைப் பெறுவீர்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, அல்சர் உபாதைகள் வரலாம். ராகவேந்திரர் வழிபாடு நன்மை தரும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடரின் கருத்து மட்டுமே. யாழ் அதிரடி இதனை உறுதிப்படுத்தவில்லை.