3 நாட்களில் அதிவேக வீதியில் பல கோடி வருமானம்!
[2025-04-15 09:58:55] Views:[109] புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில் அதிவேக வீதியில் 134 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 11, 12 ஆம் திகதிகளில் அதிவேக வீதியில் 297,736 வாகனங்கள் பயணித்திருந்ததாகவும், அதிலிருது 10 கோடி 23 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மட்டும் 387,000 வாகனங்கள் அதிவேக வீதியில் பயணித்ததாகவும், அதிலிருந்தே 134 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.