எறும்பு கடிக்கு இலக்கான 22 நாள் சிசு உயிரிழப்பு!!
[2025-04-15 10:51:13] Views:[127] எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மானிப்பாய், உடுவில், ஆலடி பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பிறந்த குறித்த பெண் சிசு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனையில், எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.