இலங்கையில் பூத்து குலுங்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்!
[2025-10-08 11:44:34] Views:[205]
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது இலங்கையில் பூக்க ஆரம்பித்துள்ளன.
இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமையப்பெற்றுள்ள தேசிய பூங்காவாவான ஹோட்டன் சமவெளின் அதிகமான இடங்களில் இந்த பூக்கள் பூக்க ஆரம்பித்துள்ளன.
இந்தப் பூக்களைக் காண வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படையெடுத்து வருகின்றனர்.
இந்த 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு பூத்ததாகவும் அதன் பின்னர் இவ்வருடம் பூத்து உள்ளது எனவும் மீண்டும் 2037 ஆம் ஆண்டே பூக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.










