NASAவின் அறிவிப்பு - பூமியை கடந்து செல்லும் 3 பெரிய விண்கற்கள்
[2024-10-28 16:39:56] Views:[261] பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக நாசா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
2024 டிபி2 என்று பெயிரிடப்பட்ட இந்த முதல் விண்கல் 110 அடி விட்டம் இருக்கும் எனவும் 7.31 இலட்சம் KM தொலைவில் இது பூமியை கடந்து செல்கிறதாகவும் கூறப்படுகிறது. இதன் பாதை இப்போது வரை சீராகத்தான் இருக்கிறது. ஒருவேளை கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்சினை காரணமாக அதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம். இரண்டாவது விண்கல் 2007 யூடி3 என்று பெயிரிடப்பட்டுள்ளது.
42 இலட்சம் கி.மீ தொலைவில் பூமியிலிருந்து இது கடந்து செல்ல இருப்பதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் 3ஆவது விண்கல்தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது எனவும் 2020 டபிள்யூ.ஜி என அழைக்கப்டும் இந்த மூன்றாவது விண்கல் 500 அடி விட்டம் கொண்டது எனவும் கூறப்படுகிறது.
சுமார் 30 இலட்சம் கி.மீ தொலைவில் பூமியிலிருந்து மணிக்கு 33,947 KM வேகத்தில் இது செல்கிறதாக கூறப்படுகிறது.