யாழில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு..!!!
[2025-01-04 14:46:15] Views:[286] யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளநிலைமைக்கு பின்னர் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் எலிக்காய்ச்சல் பரவி வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த காய்ச்சலுடன் நவம்பர் மாதத்தில் 12 நோயாளர்களும் டிசம்பர் மாதத்தில் 21 நோயாளர்களுமாக மொத்தமாக இதுவரை 33 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோய் தொற்றுக்குள்ளாகிய இருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளனர்
முழங்காவில் மற்றும் வடவடமராட்சி பகுதிகளை வசிப்பிடமாக கொண்டகொண்ட இருவரே இவ்வ்வாறு உயிரிழந்துள்ளனர் அவர்களில் ஒருவருக்கு 50 வயது என்றும் மற்றைய நபருக்கு 24 வயது எனவும் தெரிவிக்கப்படுகிறது.