தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.
[2025-01-04 21:01:39] Views:[203] தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களத்தினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கசிந்த மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக மூன்று கேள்விகள் கசிந்ததாக எழுந்த சர்ச்சைக்கு, கடந்த 31ஆம் திகதி நீதிமன்றம் தெரிவித்த உத்தரவுக்கு அமைவாக பரீட்சை ஆணையாளர் நாயகம் HJMC. அமித் ஜயசுந்தரவினால் இந்த அறிவிப்பு வெளியிட்ப்பட்டுள்ளது.