yarlathirady.com

ஐந்து நபர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு: காலியில் பரபரப்பு சம்பவம்..!!

[2025-01-04 21:34:11] Views:[177]

இன்று அதிகாலை 1:00 மணியளவில் வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 நபர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் மாத்திரமே சுடப்பட்டதாகவும் அவர்களில் கப்பரதோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததுடன், காயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர் வெலிகம வலான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.


சினிமாசெய்திகள்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!!
2025-07-15 09:34:55
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.