yarlathirady.com

புத்தளத்தில் 11.3kg தங்கம் மீட்பு: மடக்கி பிடித்த கடற்படையினர்.!!

[2025-01-05 08:49:46] Views:[247]

கற்பிட்டி, பத்தலண்குண்டுவ கடற் பகுதியில் 11.3kg நிறையுடைய தங்கத்துடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் சுமார் 28 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது எனத் கூறப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40-45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி, பத்தலண்குண்டுவ கடற் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான இயந்திர படகு ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்யும் போதே குறித்த இயந்திர படகில் தங்கம் கடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதன்போது குறித்த தங்கத்தை பறிமுதல் செய்த கடற்படையினர், அந்த இயந்திர படகில் பயணித்த மூவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!!
2025-07-15 09:34:55
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.