yarlathirady.com

யாழ்.மக்கள் பயப்படத் தேவையில்லை: பொலிஸாரின் விசேட அறிவுறுத்தல்;

[2025-01-06 07:04:11] Views:[344]

யாழ்ப்பாண மக்கள் இனி பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண நகரில் புத்தாண்டிற்கு முதல் இரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த வாரத்தில் யாழ்ப்பாண நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் 4 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி இருக்கின்றோம். 2 சம்பவங்களையும் தொடர்பில் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலதிக சாட்சிகளை சேகரிந்து ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளோம்.

இதற்குரிய ஆலோசனைகள் என்னால் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் 81 ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து வருகின்றோம்.

இனிவரும் காலங்களில் குறித்த நபர்கள் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக கட்டுக்கோப்பான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆணையை பெற்று வருகின்றோம்.

குறித்த நபர்கள் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து குறித்த குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதிக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற ஆணையில் குற்றவியல் சட்டக்கோவையின் 81 ஆவது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்து வருகின்றோம் என தெரிவித்தார்.


சினிமாசெய்திகள்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!!
2025-07-15 09:34:55
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.