yarlathirady.com

கடற்படையினரால் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் குறித்த விபரம் உள்ளே..!!

[2025-01-06 21:12:37] Views:[144]

கடந்த ஆண்டு கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவலைப்பு நடவடிக்கைகளில் சுமார் 28 ஆயிரத்து 158 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களும், 407 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கடந்த வருடத்தில் 622kg நிறையுடைய ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்தப் பெறுமதி 15 ஆயிரத்து 554 மில்லியன் ரூபாவுக்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆயிரத்து 508 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள், 700 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியான கேரள கஞ்சா, சுமார் 23 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உள்ளூர் கஞ்சா, மற்றும் 373 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதை மாத்திரைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


சினிமாசெய்திகள்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!!
2025-07-15 09:34:55
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.