யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் நாட்களில் சிறப்பு ரயில் சேவை..!
[2025-01-06 22:16:12] Views:[166] யாழ்ப்பாணத்திற்கு, தைப்பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களுக்காக ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை முன்னெடுக்கப்பட்ட உள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தால் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி 10,12,14,17,19,24,26,31 மற்றும் 2025 பெப்ரவரி 02, 04 போன்ற தினங்களில் விசேட ரயில் இலக்கம் 01 இரவு 07.40க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.
2025 ஜனவரி 10,12,14,17,19,24,26,31, மற்றும் 2025 பெப்ரவரி 02, 04 போன்ற தினங்களில் விசேட ரயில் இலக்கம் 02 இரவு 07.40க்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.
2025 ஜனவரி 10,13,14,15,17,20,24,27,31 மற்றும் 2025 பெப்ரவரி 03,04 போன்ற தினங்களில் அதிகாலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கும் பிற்பகல் 01.50 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி தனது தனது பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.