யாழில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளியிடம் கையளிப்பு;
[2025-01-08 12:41:34] Views:[173] யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, புலோலி மேற்கு பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (6) திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக விட்டை பயனாளியிடம் கையளித்தார்.
பொருளாதாரரீதியாக பின்தங்கிய குறித்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்காவில் வசிக்கும் ஜூனோ மற்றும்சாம் சின்னையா ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் இலங்கை இராணுவத்தின் 521 ஆம் படைப் பிரிவினரினால் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலர் எஸ்.சத்தியசீலன், இராணுவ உயர் அதிகாரிகள், பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க, அப்பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.