yarlathirady.com

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய 11 டொல்பின்கள்!!

[2025-01-09 05:43:55] Views:[144]

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் (7) கரையொதுங்கியுள்ளது.

முள்ளிக்குளம் வன பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் டொல்பின் குழு ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்துள்ளனர்.

பின்னர் அவற்றை மீட்டு பரிசோதணைகளை மேற்கொண்டதுடன், இது தொடர்பான தகவல்கள்களை நேற்று முன்தினமே (7) புத்தளம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

அதன்படி அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகள் உயிரிழந்த டொல்பின்களின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். இதன் போது வலையில் சிக்கியதால் அவை இறந்ததாக மருத்துவர்கள் ஊகம் தெரிவித்துள்ளனா்.

மேலும் அவற்றின் மரணத்தை உறுதிப்படுத்தும் முகமாக மாதிரிகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!!
2025-07-15 09:34:55
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.