ஏ9 வீதியில் விபத்து!! குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலி!!!
[2025-01-09 07:08:50] Views:[175] ஏ9 பிரதான வீதி, மதவாச்சியில் சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்துக்குள்ளாகியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மதவாச்சி, வஹமல்கொல்லேவ பகுதியில் நேற்றையதினம் (08) காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் பயணிவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் ஹமல்கொல்லேவ, ரம்பாவ பகுதியை சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் ரம்பேவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுடன், விபத்து தொடர்பில் பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.