பேருந்து உரிமையாளர்களுக்கு பொலிஸார் விதித்த மூன்று மாத காலக்கெடு..!
[2025-01-09 09:25:15] Views:[177] தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிப்பாகங்கள் மற்றும் அலங்கார பொருட்களை அகற்றுவதற்கு பொலிஸாரினால் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ் சங்கம் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.