விவசாயிகளுக்கு உரமானியம் மற்றும் இலவச உர விநியோகம் வழங்க நடவடிக்கை..!
[2025-01-10 09:00:29] Views:[231] பெரும்போகத்திற்கான உர மானியமாக 25,000/= ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திற்குமென உர மானியத்தை வழங்குவதற்கான கால எல்லை 2024/10/01 திகதியிலிருந்து 2025/02/01 திகதி வரையாகும்.
இதற்கென 25000/= ரூபா உர மானியம், 15,000/= ரூபா மற்றும் 10,000/= ரூபா என்ற தவணை அடிப்படையில் இரு கட்டங்களாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் முதற்கட்டமாக தற்போது 15,000/= ரூபா வழங்கப்பட்டுள்ளது.
வயல் காணிகளில் நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கென வழங்கப்படும் நிதி நிவாரணத்திற்கு மேலதிகமாக 25,000 மெட்ரிக் தொன் அளவிலான மியுரியேட் ஒப் பொடேஷ் எனப்படும் உரத்தை எதிர் காலத்தில் அரசினால் இலவசமாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.