பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது ஆண் குழந்தை!!
[2025-01-10 10:28:35] Views:[165] யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று (09) வியாக்கிழமை மதியம் தாயார் சமையல் செய்துகொண்டு இருந்தவேளை குறித்த குழந்தை மண்ணெண்ணெயை எடுத்து குடித்துவிட்டு, உடலிலும் பூசிவிட்டு விளையாடிக்கொண்டிருந்ததை அவதானித்த தாயார் குழந்தையை தூக்கியுள்ளார். அப்போது குழந்தை மயக்கமடைந்தது.
உடனடியாக குழந்தை கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் பிற்பகல் 4 மணியளவில் உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.