யாழில் வாள் மற்றும் கசிப்புடன் 17 வயது மாணவன் உட்பட இருவர் கைது!
[2025-01-12 06:01:37] Views:[188] யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் இருவேறு சம்பவங்களில் வாள் மற்றும் கசிப்புடன் 17 வயது மாணவன் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (10) வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் சுழிபுரம் - பெரியபுலோ பகுதியில் வாளுடன் 17 வயது மாணவன் ஒருவனும், சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில் 43 வயதுடைய நபர் ஒருவர் போதல் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.