போலி ஆவணங்களுடன் ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
[2025-01-12 11:43:13] Views:[150] போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இந்தியா சென்று அங்கிருந்து ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், இளவாலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் முற்படுத்திய ஆவணங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் ஜேர்மனி நாட்டுக்கான விசா போலியானது என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை நிர்ணய கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், புதுடில்லி சென்று பின்னர் அங்கிருந்து, மற்றுமொரு விமானத்தில் ஜேர்மனி நோக்கி பயணிக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே கைது செய்யது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.