இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 8 தமிழக மீனவர்கள் கைது!
[2025-01-12 17:07:53] Views:[136] மன்னாருக்கு வடக்கே நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையில் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 2 விசைப்படகுகளையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரணைதீவு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைகளை நடத்தி வருவம் கடற்படையினர், சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி நீரியல் வளத்துறையினரிடம் ஓப்படைக்கப்பட்டு அவர்கள் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.