சகிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: பெருமளவான கசிப்புடன் சந்தேகநபர் கைது!
[2025-01-14 05:53:25] Views:[184] சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்றவற்றுடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை சுன்னாகம் பொலிஸாரால் ஏழாலை கிழக்கு சிவன்கோவிலடி பகுதியில் நேற்று (13) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நீண்ட காலமாக சகிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது,110,000 மில்லிலீற்றர் கோடா, 40 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர் .
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.