9 வயதுச் சிறுமி மீது பாலியல் சேட்டை; முதியவர் கைது!
[2025-01-15 05:33:16] Views:[158] அம்பாறையில் சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் 69 வயது நபர் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (13) இவ்விடயம் குறித்து சிறுமியின் தாயார் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முன்வைத்த முறைப்பாட்டிற்கமைய அதிஸ்ட இலாபச்சீட்டு விற்பனை செய்யும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வீரமுனை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதிஸ்ட இலாபச்சீட்டு விற்பனை செய்பவர் எனவும் அம்பாறை பகுதியை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.