யாழில் கரையொதுங்கிய மர்ம மிதவை (படகு வீடு) ; மியான்மாரில் இருந்து வந்ததா என மக்கள் சந்தேகம்!
[2025-01-15 11:41:03] Views:[164] யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரை பகுதியில் மர்ம மிதவை வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த வீடு வடிவிலான மிதவை படகானது நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்றைய தினம் (15) கரையொதுங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிதவை படகில் புத்த சமய அடையாளங்கள் காணப்படுவதால் மியான்மார் நாட்டு பகுதியில் இருந்து குறித்த மிதவை வந்திருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஏராளமான பிரதேசவாசி மக்கள் மிதவை படகை சென்று ஆவலுடன் பார்வையிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.