மன்னார் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கி சூடு! இருவர் பலி!!
[2025-01-16 11:09:19] Views:[236] மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை இப்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் அதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்த மூவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
மூவரும் படுகாயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.