யாழில் போதையில் நின்ற பிரபல பாடசாலை மாணவர்கள் இருவர் கைது!
[2025-01-16 13:16:04] Views:[183] அதீத போதையில் நின்ற யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவரை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவர்கள் இருவரும் போதை மாத்திரை உட்கொண்டமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அவர்களுக்கு அவற்றை விநியோகித்தவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் வாட்ஸ் அப் குழுக்கள் ஊடாக மாணவர்களுக்கு போதை மாத்திரை விநியோகங்கள் நடைபெற்று வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. எனவே பெற்றோர்களும் தமது பிள்ளைகள் அவதானமாயிருக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.